விசா இன்றி சீக்கியர் கர்தார்பூர் செல்வதற்கான ஒப்பந்தம் மேலும் நீட்டிப்பு
விசா இன்றி சீக்கியர் கர்தார்பூர் செல்வதற்கான ஒப்பந்தம் மேலும் நீட்டிப்பு
ADDED : அக் 23, 2024 02:43 AM

புதுடில்லி : பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் சீக்கிய குருத்வாரா செல்வதற்கு விசா இல்லாமல் சீக்கியர் செல்வதற்காக ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இடத்தில் 500 ஆண்டுகள் பழமையான சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவிற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் எல்லையில் இருந்து கர்தார்புர் வரை பாதை போடப்பட்டுள்ளது. இப்பாதையை சில ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் சீக்கியர்கள் விசா இன்றி செல்வதற்காக 2019-ம் ஆண்டு இந்தியா -பாக்., தூதரகம் வாயிலாக 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் அவகாசம் நேற்று நிறைவடைந்ததையடுத்து மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.