''எதிர்காலம் இல்லாத இண்டியா கூட்டணி'': பா.ஜ., விமர்சனம்
''எதிர்காலம் இல்லாத இண்டியா கூட்டணி'': பா.ஜ., விமர்சனம்
ADDED : ஜன 28, 2024 02:02 PM

பாட்னா: இண்டியா கூட்டணிக்கு எதிர்காலம் கிடையாது என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதிரடி முடிவால் பீஹார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாலை5 மணிக்கு பா.ஜ., ஆதரவுடன் 9 வது முறையாக, நிதீஷ் குமார் முதல்வராக பதவியேற்க உள்ளார்.இவர் பா.ஜ.,வுடன் சேர்வதால், காங்., தலைமையிலான இண்டியா கூட்டணி வலு குறைகிறது.
இண்டியா கூட்டணி மற்றும் பீஹார் அரசியல் நிலவரம் குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில்: இண்டியா கூட்டணியின் முக்கிய மனிதர் நிதீஷ் குமார். அவர் தற்போது பா.ஜ., தலைமையில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இண்டியா கூட்டணிக்கு எதிர்காலம் கிடையாது. பிரதமர் பதவி காலியாக இல்லை. லோக்சபா தேர்தலில் பா.ஜ., வரலாற்று வெற்றி பெறும். பீஹாரில் 40 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
