சூதாட்ட செயலியில் ரூ. 2,000 கோடி மோசடி; தமிழகம் உட்பட 15 இடங்களில் ஈ.டி., சோதனை
சூதாட்ட செயலியில் ரூ. 2,000 கோடி மோசடி; தமிழகம் உட்பட 15 இடங்களில் ஈ.டி., சோதனை
ADDED : ஆக 13, 2025 05:23 AM
மும்பை: சூதாட்ட செயலி வாயிலாக சட்டவிரோதமாக 2,000 கோடி ரூபாய் பணபரிவர்த்தனை மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
வழக்குப்பதிவு மஹாரா ஷ்டிராவின் மும்பையில், 'பாரிமேட்ச்' என்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு பணமோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, கடந்த 2024ல் மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அ ப்போது, இச்செயலி வாயிலாக போலி கணக்குகள் துவங்கப்பட்டு, உள்ளூர் பண பரிமாற்ற ஏஜன்டுகள் வாயிலாக 2,000 கோடி ரூபாய் வரை சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட் டது கண்டறியப்பட்டது.
இந்த தொகை, 'கிரிப்டோ வாலட்கள்' வாயிலாக அனுப்பப்பட்டு, தமிழகத்தின் ஒரு நகரத்தில் உள்ள ஏ.டி.எம்.,களில் பண பரிவர்த்தனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
பண பரிவர்த்தனை இதையடுத்து, இவ்வழக்கை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தது. இதுதொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நம் நாட்டின் பிரதான நகரங்களான மும்பை, டில்லி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், மதுரை, சூரத் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில் மொபைல் போன்கள், கணினி சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.