ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மீது கோவிலுக்குள் கும்பல் தாக்குதல்
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மீது கோவிலுக்குள் கும்பல் தாக்குதல்
ADDED : அக் 19, 2024 12:43 AM
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்குள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர்; 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் கர்ணி விஹாரில் உள்ள கோவிலில், நேற்று முன்தினம் பவுர்ணமி பூஜை நடந்தது. இதில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.
அப்போது, பூஜையின்போது அதிக சத்தம் எழுப்பியதாகக் கூறி, அருகே உள்ள குடியிருப்புவாசிகள் பலர் கோவிலுக்குள் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது, இருதரப்புக்கும் இடையே தகராறாக மாறியது. அப்போது, அக்குடியிருப்புவாசிகளுக்கு ஆதரவாக ஒரு கும்பல், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே சென்று, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றது. இதில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

