தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பலாத்கார வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு கஸ்டடி

 பலாத்கார வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு கஸ்டடி

 பலாத்கார வழக்கில் கைதான காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு கஸ்டடி


ADDED : ஜன 14, 2026 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2026 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தனம்திட்டா: கேரளாவில், பலாத்கார வழக்கில் கைதான காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., ராகுல் மம்கூட்டத்தில் இடம் விசாரணை நடத்த, மூன்று நாள் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் உள்ள பாலக்காடு தொகுதி காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ராகுல் மம்கூட்டத்தில், 36. இவர் மீது ஒரு பெண் பலாத்கார புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் ராகுலை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, மற்றொரு பெண்ணும் ராகுல் மீது புகார் அளித்தார். இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க ராகுல் முன்ஜாமின் பெற்றார்.

இ தையடுத்து, கடந்த 8ம் தேதி ராகுல் மீது வட அமெரிக்க நாடான கனடாவில் வசிக்கும் கோட்டயத்தை சேர்ந்த திருமணமான பெண்ணும் இ - மெயில் வாயிலாக கேரள போலீசில் பலாத்கார புகார் அளித்தார். இதையடுத்து, ராகுல் மீது மூன்றாவதாக பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ராகுலை கட்சியில் இருந்து நீக்கி, காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது. இந் நிலையில், தலைமறைவான ராகுலை, கடந்த 11ல் பாலக்காட்டில் போலீசார் கைது செய்தனர். திருவில்லாவில் உள்ள முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us