ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கொடூரம்
ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை; மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கொடூரம்
UPDATED : ஜூலை 27, 2025 05:47 AM
ADDED : ஜூலை 27, 2025 05:15 AM

பாட்னா: பீஹாரின் கயா மாவட்டம் புத்த கயாவில் கடந்த 24ம் தேதி, ஊர்க்காவல் படைக்கான உடற்தகுதி தேர்வு நடந்தது.
இதில் பங்கேற்ற பெண் ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், அரை மயக்கத்தில் இருந்த தன்னை ஆம்புலன்ஸ் உள்ளே வைத்து மூன்று, நான்கு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த பெண் புகார் தெரிவித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் புத்த கயா போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும், தடயவியல் குழுவும் நியமிக்கப்பட்டன.
எப்.ஐ.ஆர்., பதியப்பட்ட சில மணி நேரங்களுக்குள் டிரைவர் வினய்குமார், டெக்னீஷியன் அஜித்குமார் என இருவரை போலீசார் கைது செய்தனர்.