sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோட்டையை காப்பாற்ற கட்டீலுக்கு 'கேட்பாஸ்' கம்பாலா வெற்றியாளருக்கு கதவு திறப்பு

/

கோட்டையை காப்பாற்ற கட்டீலுக்கு 'கேட்பாஸ்' கம்பாலா வெற்றியாளருக்கு கதவு திறப்பு

கோட்டையை காப்பாற்ற கட்டீலுக்கு 'கேட்பாஸ்' கம்பாலா வெற்றியாளருக்கு கதவு திறப்பு

கோட்டையை காப்பாற்ற கட்டீலுக்கு 'கேட்பாஸ்' கம்பாலா வெற்றியாளருக்கு கதவு திறப்பு


ADDED : மார் 16, 2024 10:41 PM

Google News

ADDED : மார் 16, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டையை காப்பாற்றும் முயற்சியாக, தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜ., - எம்.பி., நளின்குமார் கட்டீலுக்கு, கேட்பாஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

தட்சிண கன்னடா தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக மூன்று முறை பணியாற்றியவர், நளின்குமார் கட்டீல். வரும் லோக்சபா தேர்தலில், நான்காவது முறையாக நிற்க பிளான் செய்தார். ஆனால் அவருக்கு பா.ஜ., மேலிடம் அதிர்ச்சி கொடுத்து உள்ளது. நளின்குமார் கட்டீலுக்கு 'கேட்பாஸ்' கொடுத்துவிட்டு, முன்னாள் ராணுவ கேப்டனான பிரிஜேஷ் சவுடாவை, தட்சிண கன்னடா வேட்பாளராக பா.ஜ., அறிவித்து உள்ளது.

இதன் பின்னணி சுவாரஸ்யமானது.

கடந்த 2009 ல் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, தட்சிண கன்னடா, மங்களூரு தொகுதியாக இருந்தது. கடந்த 1957 முதல் 2004 வரை நடந்த தேர்தலில், எட்டு முறை காங்கிரசும், ஐந்து முறை பா.ஜ.,வும் வென்றிருந்தது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜனார்த்தன பூஜாரி 1977, 1980, 1984, 1989 தேர்தல்களில், தொடர்ந்து நான்கு முறை வென்று இருந்தார். ஆனாலும் தொகுதியின் வளர்ச்சிக்கு அவர் எதுவும் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

ஜனார்த்தன பூஜாரியை கடுமையாக விமர்சித்து வந்த தனஞ்ஜெயகுமாருக்கு பா.ஜ., 'சீட'் கொடுத்தது. அவரும் 1991, 1996, 1998, 1999 தேர்தல்களில் வெற்றி பெற்று, மங்களூரு தொகுதியை பா.ஜ.,வின் கோட்டையாக மாற்றினார்.

ஆனால் தொண்டர்களை ஒருங்கிணைத்து செல்லவில்லை என்று, தனஞ்ஜெய குமார் மீது, கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது. கடந்த 2004 தேர்தலுக்கு அவர் தயாராகி வந்தார்; அவர் போட்டியிட்டால் தோல்வி உறுதி என்று பேசப்பட்டது.

பா.ஜ., தலைவர்


இதனால் தனஞ்ஜெயகுமாரை ஓரம்கட்டிவிட்டு, சதானந்த கவுடாவுக்கு சீட் கொடுத்து பா.ஜ., - எம்.பி., ஆக்கியது. ஆனால் அவருக்கும் தொண்டர்கள் மத்தியில், போதிய வரவேற்பு இல்லை.

அந்த நேரத்தில் சங்பரிவாரில் பிரசாரகராக இருந்த, இளம் தலைவரான நளின்குமார் கட்டீலை, பா.ஜ., அடையாளம் கண்டது. 2009 தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு முதல் தேர்தலிலேயே 40,420 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 2014 தேர்தலில் 1,43,709; கடந்த 2019 தேர்தலில் 2,74,621 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார் நளின்குமார் கட்டீல். கடந்த 2019 ஆகஸ்ட் 20 ம் தேதி கர்நாடகா பா.ஜ., தலைவரும் ஆனார்.

இந்நிலையில் தட்சிண கன்னடாவில் பெல்லாரேயில், கடந்த 2022 ல் பா.ஜ., இளைஞர் அணி தலைவர் பிரவீன் நெட்டார் கொலை செய்யப்பட்டார். பா.ஜ., ஆட்சியின் போதே, அக்கட்சியின் பா.ஜ., இளைஞர் அணி தலைவர் கொலை செய்யப்பட்டதால், தொண்டர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகினர்.

பிரவீன் நெட்டார் குடும்பத்திற்கு ஆதரவு கூற சென்ற, நளின்குமார் கட்டீலின் காரை கவிழ்க்க பார்த்தனர். கட்சியினருக்கு ஆதரவாக இல்லை என்றும், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பா.ஜ., கட்சிக்கு ஆதரவாக இருந்த, ஹிந்து அமைப்பு பிரமுகர் அருண்குமார், பிரவீன் நெட்டார் கொலைக்கு பின்னர், பா.ஜ.,வுக்கு எதிராக மாறினார்.

புத்துாரில் தோல்வி


'புட்டிலா பரிவார் சங்கம்' என்ற பெயரில் அமைப்பை துவங்கி, ஹிந்து அமைப்பினரை ஒருங்கிணைத்தார். கடந்த 2023 சட்டசபை தேர்தலில் அருண்குமார், புத்துார் தொகுதியில் பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். ஆனால், ஆஷா திம்மப்ப கவுடா என்பவருக்கு, நளின்குமார் கட்டீல் சீட் வாங்கி கொடுத்தார்.

இதனால் சுயேச்சையாக போட்டியிட்ட அருண்குமார், பா.ஜ.,வின் ஓட்டுகளை பிரித்தார். இது காங்கிரசுக்கு சாதகமாக மாறியது. காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் ராய் வெற்றி பெற்றார். நளின்குமார் கட்டீலின் முடிவு, பா.ஜ., தொண்டர்கள் கோபத்தில் ஆழ்த்தியது. சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்தது.

புத்துாரில், நளின்குமார் கட்டீல் உருவப்படத்திற்கு, ஹிந்து அமைப்பினர் செருப்பு மாலை அணிவித்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் நளின்குமார் கட்டீலுக்கு எதிராக, ஹிந்து அமைப்புகள் திரும்பின. வரும் லோக்சபா தேர்தலில் அவருக்கு, பா.ஜ., சீட் வழங்க கூடாது என்று, ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

கம்பாலா விளையாட்டு


இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தட்சிண கன்னடா சென்ற பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, நளின்குமார் கட்டீலுக்கு தான் சீட் வழங்கப்படும் என்றார். இதனால் அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட போவதாக, புட்டிலா அமைப்பின் அருண்குமார் அறிவித்தார்.

சட்டசபை தேர்தலில் அவர் சுயேச்சையாக போட்டியிட்டதால் தான், புத்துார் தொகுதி பா.ஜ., கையை விட்டு போனது. மீண்டும் லோக்சபா தேர்தலில், அருண்குமார் சுயேச்சையாக போட்டியிட்டு ஓட்டுகளை பிரித்தால், காங்கிரஸ் வெற்றி பெற்று விடும். தங்கள் கோட்டையாக உள்ள தட்சிண கன்னடா கையை விட்டு போய் விடும் என்று, பா.ஜ., மேலிட தலைவர்கள் உணர்ந்தனர்.

நளின்குமார் கட்டீலுக்கு நிகரான தலைவர் யார் என்று கேள்வி எழுந்த போது, ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்ற, பிரிஜேஷ் சவுடா அதற்கு பதிலாக கிடைத்தார்.

கடந்த 2018 முதல் பா.ஜ.,வில் இருக்கும் அவர், சமூக சேவையில் ஈடுபட்டதுடன், கம்பாலா விளையாட்டு போட்டிகளையும் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் அவருக்கு பா.ஜ., வாய்ப்பு கொடுத்து உள்ளது- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us