கொடுத்தது ரூ.4200 : ரஷ்ய பெண்ணுக்கு கிடைத்தது 12 ஆண்டு சிறை
கொடுத்தது ரூ.4200 : ரஷ்ய பெண்ணுக்கு கிடைத்தது 12 ஆண்டு சிறை
ADDED : ஆக 15, 2024 07:11 PM

வாஷிங்டன்: உக்ரைன் போர் நிவாரணத்திற்கு 50 டாலர் நன்கொடை கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்க வாழ் ரஷ்ய பெண்ணுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய கோர்ட் தீர்ப்பளித்தது.
அமெரிக்க வாழ் ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் கேஸினியா கரேலினா,33, அமெரிக்காவின் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலே நடன கலைஞராகவும், ‛ஸ்பா' மசாஜ் சென்டர் ஊழியராக உள்ளார். இவர் தனது தன் குடும்பத்தினரை பார்க்க அடிக்கடி ரஷ்யா வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை அமைப்பு உக்ரைன் நிவாரணத்திற்கு நன்கொடை வசூலித்து தருகிறது. இந்த அமைப்பிற்கு கேஸினியா கரேலினா 50 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கினார்.
இதையறிந்த ரஷ்ய அரசு அவர் மீது சட்டத்திற்கு புறம்பாக நிதி வழங்கியதாக வழக்குப்பதிவு செய்தது. சமீபத்தில் தனது குடும்பத்தினரை பார்க்க ரஷ்யா வந்த கேஸினியா கரேலியா கைது செய்யப்பட்டார். உள்ளூர் கோர்ட்டில் நடந்த விசாரணையில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.