தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ காசா போர் நிறுத்த தீர்மானம்; ஓட்டளிப்பதை தவிர்த்த இந்தியா

காசா போர் நிறுத்த தீர்மானம்; ஓட்டளிப்பதை தவிர்த்த இந்தியா

காசா போர் நிறுத்த தீர்மானம்; ஓட்டளிப்பதை தவிர்த்த இந்தியா


UPDATED : ஜூன் 14, 2025 11:48 AM

ADDED : ஜூன் 14, 2025 02:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2025 11:48 AM ADDED : ஜூன் 14, 2025 02:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க் : பாலஸ்தீனத்தின் காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா ஓட்டளிப்பதை தவிர்த்தது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த, 2023 அக்டோபரிலிருந்து போர் நடந்து வருகிறது.

இந்த போரில், காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இறந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகள் விடுதலையில் தாமதம் செய்தனர். இதனால் மார்ச் முதல் காசாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் துவங்கும் சூழலை உருவாக்க வேண்டும். இரு தரப்பையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு ஒரு கூட்டு முயற்சி தேவை. அதற்காக ஓட்டளிப்பை இந்தியா தவிர்த்தது.


காசாவில் போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து உறுப்பு நாடுகளும் இதை ஏற்ற நிலையில், அமெரிக்கா, 'வீட்டோ' எனப்படும் தீர்மானத்தை தடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வியடையச் செய்தது.

இந்நிலையில் ஐ.நா., பொது சபையில் ஸ்பெயின் சார்பில் மீண்டும் போர் நிறுத்த தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தில் நிரந்தர போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான தடையை இஸ்ரேல் நீக்க வேண்டும், பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

ஐ.நா., பொது சபையில், 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தன. 12 நாடுகள் எதிராக ஓட்டளித்தன. இந்தியா உட்பட, 19 நாடுகள் ஓட்டளிப்பதைத் தவிர்த்தன.

இந்த நிலைப்பாடு குறித்து ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் கூறுகையில், “இஸ்ரேல்- - பாலஸ்தீன பிரச்னையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் துவங்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

அதற்காக ஓட்டளிப்பை இந்தியா தவிர்த்தது. இரு தரப்பையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு ஒரு கூட்டு முயற்சி தேவை. மீதமுள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us