தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உத்தரகண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேறியது!

உத்தரகண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேறியது!

உத்தரகண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேறியது!


ADDED : பிப் 07, 2024 06:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2024 06:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டேராடூன்: உத்தரகண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்டம் நிறைவேறியது. இதனால் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகண்ட் ஆனது.

அனைத்து மதங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அக்கட்சி ஆட்சி செய்யும் உத்தரகண்ட் மாநிலத்தில் அதற்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது சிவில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. அதை சட்டமாக நிறைவேற்றுவதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பொது சிவில் சட்ட மசோதா நேற்று(பிப்.,07) உத்தரகண்ட் மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை படித்து பார்த்து விவாதத்தில் பங்கேற்க அவகாசம் தேவை என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், இன்று(பிப்.,07) குரல் வாக்கெடுப்பின் மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற இடத்தை உத்தரகண்ட் பிடித்துள்ளது.

மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். கவர்னர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அது சட்டமாக அமலுக்கு வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us