உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 26, 2024 11:34 PM

அ நிறம் | அளவு
உத்தரகண்டை தொடர்ந்து அசாமிலும் பொது சிவில் சட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். எங்களின் அடுத்த முக்கியமான நோக்கம், பொது சிவில் சட்டம் தான்.
ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,
திட்டத்தை ரத்து செய்வோம்!
ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும், 'அக்னிபாத்' திட்டம், இளைஞர்களின் நலனுக்கு எதிரானது. இந்த திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறி விட்டது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை ரத்து செய்வோம்.
மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்
இன்னும் ஏன் மவுனம்?
மேற்கு வங்கத்தில் திரிணமுல் கட்சியினர் செய்த அட்டூழியம் குறித்து, காங்கிரஸ் கட்சியினர் இன்னும் மவுனம் காக்கின்றனர். பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க காங்., மறுப்பது ஏன்?
ஸ்மிருதி இரானி, மத்திய அமைச்சர், பா.ஜ.,
