ADDED : ஜன 01, 2026 12:26 AM
புதுடில்லி: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி உணவு டெலிவரி சேவையில் தடங்கல் ஏற்படாமல் இருக்கவும், ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்ததாலும் ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை, 'ஸ்விகி, சொமேட்டோ' நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
உணவு மற்றும் மளிகை டெலிவரி ஊழியர்கள் குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற பணி நிலைமை, அதிக அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புத்தாண்டை ஒட்டி, செயலி சார்ந்த டெலிவரி ஊழியர்களுக்கான இந்திய கூட்டமைப்பு நேற்று, வேலை நிறுத்தம் அறிவித்திருந்தது.
சேவையில் தடங்கல் ஏற்படாமல் இருக்க, 'சொமேட்டோ, ஸ்விகி, செப்டோ' உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரு ஆர்டருக்கான ஊக்கத்தொகையை பல மடங்கு அதிகரித்துள்ளன.
இரவு 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை ஒரு ஆர்டருக்கு 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வழங்குவதாக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

