தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அமெரிக்காவை நோக்கி வந்த ராட்சத விண்கல்: வளிமண்டலத்தில் வெடித்ததால் பாதிப்பு தவிர்ப்பு

 அமெரிக்காவை நோக்கி வந்த ராட்சத விண்கல்: வளிமண்டலத்தில் வெடித்ததால் பாதிப்பு தவிர்ப்பு

 அமெரிக்காவை நோக்கி வந்த ராட்சத விண்கல்: வளிமண்டலத்தில் வெடித்ததால் பாதிப்பு தவிர்ப்பு

2


ADDED : ஜூன் 01, 2026 12:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 12:55 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் வான்பரப்பில் நுழைந்த பிரமாண்ட விண்கல், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட அதிர்வுகளால் வீடுகள் குலுங்கியதையடுத்து, நிலநடுக்கம் ஏற்பட்டதோ என அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான மாசசூசெட்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் அரிய வானியல் நிகழ்வு ஒன்று நடந்தது.

விண்ணில் இருந்து வந்த ராட்சத விண்கல் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட உராய்வு காரணமாக, பகல் நேரத்திலேயே வானில் பிரகாசமான நெருப்பு பந்து தோன்றி மறைந்தது. அதைத் தொடர்ந்து, சில நொடிகளில் பீரங்கி வெடிப்பது போன்ற பயங்கர வெடி சத்தம் கேட்டது.

பாஸ்டன், கேப் காட், நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் ரோட் தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் பயங்கர சத்தத்துடன், நில அதிர்வு போன்ற உணர்வும் ஏற்பட்டதால், அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்து நாசா மற்றும் அமெரிக்க விண்கல் சங்கம் கூறியிருப்பதாவது:

அமெரிக்க வான்பரப்பில் வெடித்தது மூன்று அடி அகலமும், கணிசமான எடையும் கொண்ட ஒரு விண்வெளிப் பாறையாகும்.

இது மணிக்கு 1.20 லட்சம் கி.மீ., என்ற கற்பனைக்கு எட்டாத அதீத வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 64 கி.மீ., உயரத்தில், கடுமையான காற்று உராய்வை தாங்க முடியாமல், அது வெடித்து சிதறியது.

இந்த வெடிப்பின்போது வெளியான ஆற்றலானது, 300 டன், 'டி.என்.டி.,' வெடி பொருட்களை ஒன்றாக வைத்து வெடிப்பதற்கு சமமானதாக இருந்தது.

இவ்வாறு அவை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் அதிநவீன கோஸ் - 19 செயற்கைக்கோள், பாஸ்டன் நகரின் தெற்கு கடற்கரை பகுதிக்கு மேலே வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு பிரமாண்ட ஒளிர்தலை தன் கேமராவில் பதிவு செய்ததன் வாயிலாகவே, விஞ்ஞானிகள் விண்கல் வெடித்ததை உறுதி செய்தனர்.

விண்கல் பூமியின் மிக உயர்ந்த வளிமண்டலத்திலேயே வெடித்து சிதறிவிட்டதால், தரையில் இருந்த மனிதர்களுக்கோ, கட்டடங்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என உள்ளூர் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us