குருவாயூர் கோவிலுக்கு 25 சவரன் தங்க கிரீடம் காணிக்கை
குருவாயூர் கோவிலுக்கு 25 சவரன் தங்க கிரீடம் காணிக்கை
ADDED : அக் 18, 2024 04:05 AM

பாலக்காடு: கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 25 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை, துபாயில் பணியாற்றும் கேரள மாநிலம், சங்கனாசேரி கோட்டமுறி பகுதியைச் சேர்ந்த ரதீஷ் மோகன் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.
கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கிரீடத்தை பெற்று கொண்டார். கோவில் துணை நிர்வாகி பிரமோத், உதவி மேலாளர் பிரசாந்த், கிரீடம் சமர்ப்பித்த ரதீஷ் மோகனின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இவர், குருவாயூர் மூலவர் கிருஷ்ணருக்கு, தங்க புல்லாங்குழலை கடந்தாண்டு அக்டோபரில் காணிக்கையாக சமர்ப்பித்தார். குருவாயூர் கோவிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உட்பட பலர், தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.