ADDED : ஜூலை 12, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தைச் சேர்ந்த அஷ்ரப் மகள் ஹன்னா 11, ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன் சிறுமி பக்கத்து வீட்டு பூனையுடன் விளையாடியபோது ஹன்னாவை பிராண்டியது.
ரத்தக்காயம் ஏற்பட்டதால் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி போட்டனர்.
இரண்டாவது தடுப்பூசி போட்ட பின் ஹன்னாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் பத்தனம் திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கும் அவரது உடல்நிலை மோசமானதால் கோட்டயம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஹன்னா இறந்தார்.