மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி வாலிபருக்கு ஆயுள் தண்டனை
மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜன 22, 2025 08:37 PM
பரேலி:மின்சாரம் பாய்ந்து நான்கு வயது சிறுமி உயிரிழந்த வழக்கில், மின்சாரம் திருடும் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், பரேலி மாவட்டம் குயிலா கிராமத்தில் வசித்த ஹிப்சா,4, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது, பக்கத்து வீட்டில் வசித்த ஷம்ஷர் அலி மின்சாரம் திருடும்போது, அவரது வீட்டு வாசலில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால், ஹிப்சா மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் குறித்து, ஹிப்சாவின் மாமா இர்பான் ரசா, கொடுத்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஷம்ஷர் அலியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், கூடுதல் குற்றவியல் நீதிபதி ரவிகுமார் திவாகர், குற்றவாளி ஷம்ஷர் அலிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

