ADDED : நவ 17, 2024 11:02 PM
துமகூரு: சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து துமகூரு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
துமகூரின் குப்பி நிட்டூர் கிராமத்தில் வசித்தவர் மோகித் குமார், 32. இவருக்கு திருமணம் ஆகி விட்டது.
இந்நிலையில், மோகித் குமாருக்கும், மனைவியின் உறவினரின் மகளான 13 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், 'போக்சோ' வழக்கில் மோகித் குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது துமகூரு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இச்சம்பவம் 2022ல் நடந்தது.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மோகித் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 3.45 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் 10.45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.