ADDED : செப் 23, 2026 04:50 AM

பாட்னா: பீஹாரின் ஜமுய் பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு தன் ஆண் நண்பருடன் சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர்களை வழிமறித்து தாக்கிய ஏழு பேர் கும்பல், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது. அவர்கள் மீது வழக்கு பதிவானது; மூன்று பேர் கைதாகினர். நேற்று ஒருவனை கைது செய்ய முயன்றபோது, தப்பிக்க முயன்றதால், போலீசார் அவனைச் சுட்டுப் பிடித்தனர்.
மீண்டும் பார்லி., சிறப்பு கூட்டம்?
புதுடில்லி: பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 13ம் தேதி நிறைவடைந்தது. காலவரையின்றி ஒத்தி வைக்கப் பட்டதே தவிர, கூட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படவில்லை. அதனால், விஜயதசமிக்கு முன், அக்., 20ல் மீண்டும் பார்லி.,யை கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதிகாரி தலையீடு; விலகினார் நீதிபதி!
மும்பை: மஹாராஷ்டிராவில், திருமணம், விவாகரத்து, சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங் களில் அனைத்து மதங்களுக்கும் பொது சட்டங் களை அமல்படுத்தும் நோக்கில், யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டத்தை, செயல்படுத்துவதற்கான வரைவை உருவாக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை, பா.ஜ., அரசு அமைத்தது.
இக்குழுவில் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சி.சவான் இடம்பெற்றிருந்தார். ஆனால், இக்குழுவின் செயல்பாடுகள் பற்றியும், மாநிலத்திற்கு வெளியில் இருந்து ஓர் அதிகாரியின் பங்கேற்பு குறித்தும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதனால் நீதிபதி ஆர்.சி.சவான், அக்குழுவில் இருந்து நேற்று விலகினார்.
