அனைத்து துறையிலும் சீர்திருத்தம்; பிரதமர் மோடி பெருமிதம்
அனைத்து துறையிலும் சீர்திருத்தம்; பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : டிச 09, 2024 02:42 PM

ஜெய்ப்பூர்: நாட்டில் அனைத்து துறையிலும் சீர்திருத்தம், மாற்றம் நடந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று உலகில் உள்ள ஒவ்வொரு நிபுணரும், ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்தியாவின் வளர்ச்சியை நினைத்து பெருமை அடைகின்றனர். அனைத்து துறையிலும் சீர்திருத்தம், மாற்றம் நடந்துள்ளது. ஜனநாயகம், மக்கள்தொகை ஆகியவற்றின் உண்மையான சக்தியை உலகுக்கு இந்தியா எடுத்துரைக்கிறது. வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பா.ஜ., அரசு செயல்படுகிறது.
5வது இடம்
இந்தியா 11வது பெரிய பொருளாதாரமாக மாற 7 தசாப்தங்கள் ஆனது, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசு நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவில்லை. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டிற்கும் பா.ஜ., அரசு முன்னுரிமை அளிக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் போது மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. பா.ஜ., ஆட்சியில் மாநில வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ராஜஸ்தான் இதன் மூலம் நிறைய நன்மைகளைப் பெறுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.