தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கோவா காங்., நிர்வாகி பாம்பு கடித்து உயிரிழப்பு

கோவா காங்., நிர்வாகி பாம்பு கடித்து உயிரிழப்பு

கோவா காங்., நிர்வாகி பாம்பு கடித்து உயிரிழப்பு


UPDATED : மே 15, 2026 10:58 PM

ADDED : மே 15, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 10:58 PM ADDED : மே 15, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பனாஜி:கோவா மாநில காங்கிரஸ் நிர்வாகியும், சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட போன்டா சட்டசபை தொகுதி வேட்பாளருமான கேத்தன் பட்டிகர் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

கோவா மாநில காங்கிரஸ் நிர்வாகி கேத்தன் பட்டிகர், 38. இவர் சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட போன்டா சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்., வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அண்டை மாநிலமான கர்நாடகாவின் டென்டேலி கிராமத்துக்கு பட்டிகர் காரில் சென்று கொண்டிருந்தார்.

கோவா - கர்நாடகா எல்லையில் கார்மால் காட் பகுதியில் திடீரென காரில் இருந்து அவர் கீழே இறங்கினார். அப்போது அவரை பாம்பு கடித்ததை அடுத்து தர்பன்டோரா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு உதவியாளர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பட்டிகர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us