தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை!

கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை!

கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை!


ADDED : ஏப் 01, 2026 11:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 11:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கடவுளின் தேசம்' என்றழைக்கப்படும் கேரளாவில், கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை. ஒருசில தங்கக் காசுகளுக்காக சபரிமலை அய்யப்பனையே ஆளும் இடதுசாரி அரசு ஏமாற்றி விட்டது. இடதுசாரி கூட்டணியும், காங்., கூட்டணியும் ஊழல் பெருச்சாளிகள். இந்த இரு கூட்டணிக்கும் வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,

ஊழல் மலிந்து விட்டது!


அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் குடும்பத்தினர் ஒட்டுமொத்த மாநிலத்தின் வளங்களையும் கொள்ளை அடிக்கின்றனர். பா.ஜ., ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அடிமையாக இருக்கிறார். அவருக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அடிமையாக இருக்கிறார்.

பிரியங்கா லோக்சபா எம்.பி., - காங்கிரஸ்

சொத்துக்களை அபகரிக்க திட்டம்!



தொண்டு நிறுவனங்களை கட்டுப்படுத்தவே வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவை மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. அவற்றின் சொத்துக்களை கையகப்படுத்துவதே அரசின் நோக்கம். தொண்டு நிறுவனங்களை பார்த்து பயப்படும் அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது.

அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us