தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்
ADDED : செப் 02, 2025 09:25 PM

பெங்களூரு: 127 கிலோ தங்க கடத்தல் வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யாவுக்கு வருவாய் புலனாய்வுத்துறை ரூ.102 கோடி அபராதம் விதித்தது. அபராதத்தை செலுத்தாவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகை ரன்யா ராவ், துபாயில் இருந்து 127 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் வருவாய் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் 4ல் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள நடிகைக்கு, வருவாய் புலனாய்வுத்துறை சிறையிலேயே நோட்டீஸ் வழங்கியது. அவருக்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கூட்டாளியான டி.கே.ராஜூ 72 கிலோ தங்கம் கடத்திய நிலையில், அவருக்கு ரூ.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட காலத்திற்குள்ள அபராதம் செலுத்தாவிட்டால், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
இந்த வழக்கில் சஹில் ஜெயின் மற்றும் பரத் ஜெயின் தலா 63.61 கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் தலா ரூ.53 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேருக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.270 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய காபிபோசா மனு ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கு செப்டம்பர் 11ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.