ADDED : நவ 08, 2024 07:41 AM
* வாய்ப்பூட்டு திறக்குமா?
பெமல் பேக்டரி நிர்வாகம், முனிசி.,க்கு வருமான வரி 12 கோடி ரூபாய் கொடுத்திருக்காங்க. இதன் செலவு விபரம் பற்றி தெரிவிக்க வேணும்னு ஒரு கவுன்சிலர் வாய் திறந்திருக்காரு.
இதில தான் தெரு விளக்கு அமைக்க 3 கோடியோ அல்லது 4 கோடியோ செலவழிச்சதாக ஆபீஸ் வட்டாரத்தில் சொல்றாங்க. ஒவ்வொரு வார்டிலும் 50 லட்சம் ரூபாய்க்கு திட்டம் நிறைவேற்றுவதாக சொன்னாங்களே... செய்தாங்களான்னு 35 உறுப்பினர்களில் ஒருவர் கேட்டிருக்காரு. மத்தவங்களுக்கு போடப்பட்டுள்ள வாய்ப்பூட்டு எப்போது திறக்குமோ.
***
* 3 பேருக்கு 'கல்தா'
ரெண்டு மாவட்டத்துக்கு சேர்ந்தாப்ல ஒரு கூட்டுறவு வங்கி இருக்குது. இந்த வங்கியில் பல 'சி' ஊழல் நடந்திருக்கிறதா எதிர்ப்பு கிளம்பியிருக்கு. ஆனாலும், ஏதோ ஒரு வகையில் ஒத்துப் போய், பெட்டி பாம்பா அடங்கிடுறாங்க. பூக்காரங்க வெடித்தது எல்லாமே 'புஸ்'வாணமாகிடுச்சு. ஆனால், அந்த ரகம் நானில்லையென, 'மாஜி' சபா., துருவ துவங்கிட்டாரு. 'பக்கா' ஆதாரங்களை பேச வெச்சாரு. முதல் ரவுண்டில் கோலாரு, கோல்டு சிட்டி, சிந்தாமணி ஆகிய மூணு மேனேஜர்கள் சிக்கிட்டாங்க. அந்த மூணு பேருக்குமே கல்தா கொடுத்திருக்காங்க. எலிகள் தான் பலி. ஆனால் திமிங்கிலம் சிக்க வேணும்னு வலை வீசி இருக்காங்க. உப்பை தின்னவங்க தண்ணீர் குடிக்க வேணாமா?
***
* யாருக்கு ஆப்பு?
'மாஜி' பூக்கார செங்கோட்டைக்காரர், தனக்கென ஒரு அசெம்பிளி தொகுதியை தேடுறாரு. கோல்டு சிட்டி, ப.பேட்டை, மாலுார் என மூணு தொகுதிகளில் ஒன்று தயார் செய்வதில் குறியாக இருக்காரு. ஆனால் அவருக்கு ப.பேட்டை தான் கெட்டி என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதையறிந்த கைகார அசெம்பிளிக்காரர், தமது தொகுதி கையை விட்டு போகாத படி, பூக்கட்சியின் முக்கிய நபர்களுக்கு துாண்டில் போட்டுள்ளார். அதில் அவருக்கு செல்வாக்கு கூடி வருது.
இலை கட்சிக்காரர்கள் கூண்டோடு அவர் பின்னே செல்வதும் முடிவாகி உள்ளது. இதுல, 'மாஜி' பூக்காரருக்கு இப்பவே ஆப்பு வைக்க போறாராம்.
****
* உள் வேலையா?
விளையாட்டு திடலான முனிசி., ஸ்டேடியம் தரம் உயர்த்த வேண்டும் என்பது விளையாட்டு ஆர்வம் உள்ளவர்களின் விருப்பம். ஆனால், மழை நீர் தேங்குவதை தடுக்கலையே. இந்த ஸ்டேடியத்தை பட்டாசு விற்பனைக்கு வியாபார நிலையம் ஆக்கிட்டாங்களே.
புல்லு மார்க்கெட்டை வாகன நிறுத்துமிடமாக்க திட்டம் போட்டு வீணாதானே கிடக்குது. இந்த இடத்தை மறந்துட்டாங்களா. எதுக்குமே பயன்படுத்தாம இருக்கிற புதிய பஸ் நிலையத்தையாவது தேர்வு செய்திருக்கலாமே. ஒரு வழியாக விளையாட்டுக்கு மைதானமே இல்லாமல் ஆக்குவது தான் இவர்களின் உள் வேலையோ.
***

