ADDED : நவ 22, 2024 07:13 AM
கார்ட்டூன் வரைய கொடுக்க வேண்டும் சார்
* என்ன நடந்தாலும்...!
கோல்டு நகரின் அசெம்பிளி மேடத்துக்கு இன்டர்வியூ பேரில், மண் வாரி இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலையோட நிர்வாக பெரிய ஆபீசர் தரிசனம் தருவதற்கு, 10 நாட்கள் காத்திருந்தாங்க. அவர் தரிசனத்தின் போது, 'எல்லாமே டிபென்ஸ் மினிஸ்ட்ரி' பார்த்துக் கொள்ளுமுன்னு சொல்லிட்டாராம்.
இந்த சேதியால், போராடுவோர் வதங்கி போகல. என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு இருக்காங்க. கு.அண்ணா, இம்மாதம் 22ல் முத்தரப்பு பேச்சு நடத்த போறாராம். அவரை தான் நம்பி இருக்காங்க. எழுத்துபூர்வமாக பதில் வேணுமாம்; இதுவே இவர்களோட எதிர்பார்ப்பாமே.
-------------
* பணம் என்னாச்சு?
பாதாள சாக்கடை திட்டத்தை கோல்டு சிட்டியின் ரா.பேட்டையில் பல கோடி செலவுல ஏற்படுத்தினாங்க. ஆனால், சுரங்க குடியிருப்பு பகுதியில் அந்த திட்டம் கொண்டு வரப்படலை.
பெயரளவில் பல கோடி செலவுல நவீன கழிப்பறைகளை, பகுதிதோறும் கட்டினாங்க. ஆனால், பயன்படுத்த தெறக்கவே இல்லை. இப்பவும் திறந்த வெளியை பயன்படுத்தி வர்றாங்க.
வீட்டுக்கொரு கழிப்பறைக்கு பணம் ஒதுக்கினாங்க. அந்த தொகையும் வீடுதோறும் வழங்கல. ஆனா, வழங்கி விட்டதா பட்டுவாடா கணக்கு காட்டிட்டாங்களாம். மனித கழிவு பேர்ல பணம் சாப்பிட்டாங்களாம். இதன் பேர்லயும் புகாரு போயிருக்கு. ஆனால், விசாரணை நடந்தாப்ல தெரியல.
------
* சந்தா சங்கம் எங்கே?
மண்வாரி இயந்திரம் தயாரிக்கிற பொதுத் துறை நிறுவனத்தில், 'பெர்மனன்ட்' ஊழியர்களுக்கான மத்திய ஒர்க்கிங் கிளாஸ் செங்கொடி சந்தா சங்கம், போராடுறவங்களுக்காக ஒருநாள் வேலையும் கூட தியாகம் செய்யலையாம். இந்த போராட்டத்தையும் முன்னிருந்து நடத்துறாங்க. கோல்டு நகரமே ஆதரித்து குரல் தராங்க. ஆனால் இந்த சொந்த 'சந்தா சங்கம்' எங்கே போனதென தேடுறாங்களே.
-------
* மவுனமே சாதனை!
வீராதி வீரர்களை, வீராங்கனைகளை முனிசி.,க்கு கவுன்சிலர் ஆக்கினாங்க. ஒன்றரை வருஷமா ஒரு கூட்டமும் முனிசி.,யில நடத்தல. இதை இவங்க கேட்க கூட யாரும் வாய் திறக்கலயோ. இதுக்கு தானா கவுன்சிலர் ஆக்கினாங்க. எதுக்கு பெட்டி பாம்பாக சுருண்டு இருக்காங்கன்னு நகரமே பேசுவது, அவங்க காதுகளுக்கு கேட்கல போல.
மீதி இருக்கும் ஒரு வருஷத்தையும் கூட, வாயே திறக்காமல் சாதனையாக மவுனமாகவே காலத்தை ஓட்டிடுவாங்களா. இது தான், 'பப்ளிக் டாக்'கா இருக்கு.
***