ADDED : மார் 16, 2025 11:07 PM
சோற்றில் மறைக்கலாமா?
ஒரு காலத்தில், மாநில அளவில் எல்லா வசதிகளும் உள்ள இடம் கோல்டன் நகரம். தற்போது இந்த சிட்டியில் மருத்துவ வசதியே இல்லை. பெரிய பாதிப்பு ஏற்பட்டால் ஆந்திர முதல்வர் தொகுதியான குப்பம், கோல்டு சிட்டி உள்ள மாவட்ட, மாநில தலைநகரங்களுக்கு செல்ல வேண்டும்.
இந்த நிலைக்கு முடிவு கட்ட நல்ல காலம் எப்போது உதிக்குமோ. அசெம்பிளியில் பலமிக்கவராக இருந்த தொகுதியின் அசெம்பிளிக்காரருக்கு தேசப்பிதா பெயரில் மருத்துவக் கல்லுாரி அமைக்க வாய்ப்பு கொடுத்தாங்க. ஆனால், அந்த மருத்துவ கல்லுாரியை தலைநகருக்கு மாற்றிட்டாங்க.
கோலார் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லுாரி ஏற்படுத்துவதாக பட்ஜெட்டில் அறிவிச்சிருக்காங்க. அனைத்து உள் கட்டமைப்பும், உரிய பாதுகாப்பு வசதிகளும் உள்ள கோல்டு சிட்டியில் ஏற்படுத்த வேண்டும்னு கேட்க வேண்டியது யாரு.
ஆனால் போதிய நிலம் இல்லையே என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறாப்ல தட்டிக் கழிக்கிறாரு. ஏற்கனவே கோலாரு, குப்பம் ரெண்டு சிட்டியிலும் தனியார் மருத்துவ கல்லூரி இருக்கிறதால தனியாருக்கு வருமானம் குறைய கூடாதென உள் வேலையில இறங்கி இருக்கிறாங்களோ?
வேலி அலட்சியம்!
காணாமல் போன வனப்பகுதிகளின் நிலம், பல ஏரிகள் பற்றி மாநிலம் முழுவதும் துருவ துவங்கி இருக்காங்க. சுடுகாடு, கால்வாய் கூட விட்டு வைக்காமல் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், கோல்டு சிட்டியில் முனிசி.,யிடம், காலி நில சொத்துக்கள் எங்கெங்கு இருக்குதென விபரம் இருக்குமா. எல்லாமே ஆபீசர்கள் உதவியோட மாயமானதாக சொல்லப்படுது. முனிசி.,யின் காலி நிலத்தை பாதுகாக்க என்ன தயக்கமோ. ஏன் வேலி அமைக்காமல் அலட்சியம் காட்டுறாங்களோ. முறைகேடு செய்வது மட்டும் குற்றமில்லை. அதற்கு துணை போவதும் குற்றம் தானே என்பதை புரிஞ்சுக்குவாங்களா.
'குடா'வில் இருந்து 'புடா'
கோல்டு சிட்டி, ப.பேட்டை என ரெண்டு தொகுதியின் நகர அபிவிருத்திக்கென இருப்பது ஒரு 'குடா'. இதன் தலைவர் பதவிக்கு எப்பவோ ரெண்டு தொகுதிகளிலும் தகராறு தான். இம்முறை 'குடா'வை ப.பேட்டை பறித்துக் கொண்டது; கோல்டு சிட்டி ஏமாந்தது.
இதனால் அதிருப்தி தான் எழுந்துள்ளது. இதனை தடுக்க ப.பேட்டைக்கென 'புடா' ஏற்படுத்த கோரிக்கை உருவாகி உள்ளதாம். ஏற்கனவே, பல ஆயிரம் கோடியில் உருவாகும் தொழிற் பூங்கா அதிகாரத்தில் பங்கு கேட்டு சொந்தம் கொண்டாடுவதை கோல்டு சிட்டியில் ஜீரணிக்க முடியலயாம்.
விஷ பரீட்சை
முனிசி.,க்கு அடுத்து நடக்க போகும் தேர்தல் பரீட்சைக்கு பிரமுகர்கள் தயாராகி வராங்க. நான் தான் டாப் லீடர் என்றவரு கூட அடுத்து தேறிடும் வார்டை தேடி இடம் மாறும் நிலை உள்ளது. ஏற்கனவே பதவியில் இருக்கிற சிலரை காணவில்லை என ஓட்டு போட்டவங்க அதிருப்தியில் இருக்காங்க.
மறுபடியும் முனிசி.,க்குள் நுழைய போவது எத்தனை பேரோ. முனிசி., அதிகாரம் கைகாரங்க வசம் சென்றால், கூட்டுறவு வங்கி ஊழலில் சிக்கிய தவிக்கிற கோலார்காரர் இடத்தில் தான் கையேந்தி நிற்கும் நிலை வரும்னு முனிசி., வட்டாரம் தெரிவிக்குது.