ஆர்.பேட்டை தேசப் பிதா சதுக்கத்தில், பிரபலமான ஜவுளிக்கடை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதென ஏழு ஆண்டுகளுக்கு முன்   கட்டடத்தை இடித்து தள்ள அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடினாங்க. அப்போதைய பூவின் செங்கோட்டைக்காரர் பொழுது விடிவதற்குள் மண்வாரி இயந்திரங்களை பயன்படுத்தி கட்டடங்களை தகர்க்க செய்தாரு.
இதை தடுக்க உள்ளூர் தலைவர்கள் பேரம் நடத்தி தோல்வி அடைந்தாங்க. ஒருவழியாக கட்டடம் தரை மட்டமாகினது. அந்த இடத்தின் பகுதி சிதைந்து போனது. கட்டட கழிவுகளை இதுவரையில் அங்கு முழுமையாக அகற்றவில்லை. பிரசித்தி பெற்ற கோல்டு பீல்டு கட்டடமும் உடைத்து நொறுக்கினாங்க. ஆனால் அந்த கட்டட கழிவுகளையும் அகற்ற வில்லை.
ஆக்கிரமிப்புகளை அகற்ற காட்டும் அக்கறை போல அதன் கழிவுகளை வெளியேற்ற, ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேணுமா. பஸ் நிலையத்தில் கால்வாய் சீரமைக்க பள்ளம் தோண்டினதை சீரமைக்க எப்போது நல்ல காலம் பொறக்க போகுதோ.
கோரமண்டல் டோல் கேட் பகுதியில் பயணியரின் பஸ் ஷெல்டர் ஏற்படுத்தி, முழுமை பெறாமல் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அது சிதைந்து கிடக்குது.
மழை, வெயில் காலங்களில் பயணியர் ஒதுங்க கூட இடம் இல்லாமல் அவதிப்படுறாங்க. இந்த பகுதியில் அரசியல் பிரமுகர்கள், வட்டார பஞ்சாயத்து தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் இருக்கிறாங்க. இருந்தும் கூட இந்த சிதைந்து வரும் பஸ் ஷெல்டர் பற்றி சிந்திக்க நேரமே இல்லை.
கட்சி தொண்டர்களை அசெம்பிளி மேடம் மறந்துட்டாங்க என்ற குறைபாடு இருந்தது. இதனால் அதிருப்தியில் இருக்கும் கட்சியின் மூத்தவர்கள், வருத்தத்தில் உள்ளாங்க.
இந்த சந்தர்ப்பத்தில் தான், அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து  பாதுகாப்புக்குழு உருவாகி இருப்பதில் தங்களை அடையாளப்படுத்த தயாரானாங்க.
இவர்கள், எதிரிகளாக மாறிட போறாங்களோன்னு தெரிய வந்ததும், எங்கும் செல்ல விடாமல் அணை போட, ஒதுங்கியவர்களை நாடிச் சென்று, தக்க வைக்கும் வேலையை செஞ்சாங்க.
ஆனாலும், சுயமரியாதை உள்ளவங்க, நேரம் வரட்டும்னு காத்திருக்காங்க. அரசு நியமன பதவிகள் எதிர்பார்த்து, ஏமாந்தவங்க எதிரணியில் இருக்காங்க. முனிசி., தேர்தல் நேரத்தில், சீட் தரும் போது தான் மேடம் யாரென தெரிஞ்சிக்க போறாங்க. சில கவுன்சிலர்களுக்கு சீட் தராமல் கல்தா கொடுக்கப்போறாங்களாம். எதிரியான தலைவரிடம் டோக்கன் அட்வான்ஸ் வாங்கிட்டாங்க.
யார் அந்த கறுப்பு ஆடுகள் கூட்டத்தில் இருக்காங்களான்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்.

