ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக அறிவித்தது மத்திய அரசு
ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக அறிவித்தது மத்திய அரசு
ADDED : ஜன 01, 2024 06:02 PM

புதுடில்லி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரும், பிரபல தாதாவுமான லக்பீர் சிங் லண்டாவை, பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லண்டா, 33. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய, சர்வதேச பாபர் கல்சா அமைப்பில் உள்ளார்.
இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் சத்வீந்தர் சிங் மற்றும் சத்தீந்தர்ஜித் சிங் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கோல்டி பிரார் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட இயக்கமான பாபர் கல்சா அமைப்புடன் கோல்டி பிரார் தொடர்பில் இருந்துள்ளார். பஞ்சாபில் பிரபலமான பாடகர் சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டதற்கு மூளையாக கோல்டி பிரார் செயல்பட்டார் எனக் கூறப்படுகிறது.