தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/10 ஆண்டு கால அனுபவம் மூலம் மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன் : மோடி உறுதி

10 ஆண்டு கால அனுபவம் மூலம் மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன் : மோடி உறுதி

10 ஆண்டு கால அனுபவம் மூலம் மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன் : மோடி உறுதி


UPDATED : ஜூன் 07, 2024 07:11 PM

ADDED : ஜூன் 07, 2024 06:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2024 07:11 PM ADDED : ஜூன் 07, 2024 06:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 10 ஆண்டு கால ஆட்சி அனுபவத்தின் மூலம் மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன் என மோடி தெரிவித்தார்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கிய மோடி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு மோடி அளித்த பேட்டி,

ஆட்சி அமைக்க எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன். 18-வது லோக்சபா புதிதாக துவங்குகிறது. 18வது லோக்சபா புதிய ஆற்றலும், இளம் ஆற்றலும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட மக்களவை. மத்தியில் தே.ஜ. கூட்டணி மீண்டும் வலுவான அரசை அமைக்கும். எந்த வேகத்தில் நாடு முன்னேறி கொண்டிருக்கிறதோ, அந்த மாற்றங்கள் நாடு முழுதும் தெரிந்து கொண்டிருக்கிறது.

என்.டி.ஏ. கூட்டத்தில்ஒரு மித்த முழு மனதோடு என்னை பார்லிமென்ட் குழு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் ஆதரவு கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கினேன். அவரும் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். பதவி ஏற்பு விழா குறித்து ஜனாதிபதி மாளிகை முறைப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். வருங்காலத்தில் வேகம், உத்வேகத்துடன் மத்திய அரசு செயல்படும்.

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். நிலையான அரசு அமைந்திருந்ததால் இந்தியாவின் வளர்ச்சி மிக வேகமாக இருந்தது அதன் பலன்கள் பல்வேறு மாநிலங்களுக்

கும் கிடைத்தன.

2047-ல் இந்தியா 100-வது சுதந்திர தினத்தின் போது மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. 10 ஆண்டு கால ஆட்சி அனுபவத்தை கொண்டு மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us