ADDED : பிப் 22, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை ஒரு குவிண்டாலுக்கு, 25 ரூபாய் உயர்த்தி, 340 ரூபாயாக நிர்ணயிக்க ஒப்புதல் தரப்பட்டது.
இது குறித்து மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகையில், '' கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் வைத்து, 2024 அக்., - 2025 செப்., வரையிலான சர்க்கரை சீசனுக்கு, கரும்புக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு குவிண்டாலுக்கு 340 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்'', என கூறினார்.