விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு
விடைபெறுகிறது 2025; வருக...! வருக...! 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு; கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு
ADDED : டிச 31, 2025 09:08 AM

நமது நிருபர்
புதுடில்லி: 2025ம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
நடப்பு 2025ம் ஆண்டு இன்றுடன் நிறைவுகிறது. இன்றுதான், வார கடைசி நாள், மாத கடைசி நாள், வருடத்தின் கடைசி நாள் ஆகும். கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று இரவு 12 மணியுடன் 2025ம் ஆண்டு நிறைவடைந்து, நாளை 2026வது ஆங்கில புத்தாண்டு பிறக்க உள்ளது. 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டது. இந்தாண்டு நிறைவு பெற்று ஒரு புத்தம் புதிய ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதைப் பயனர்களுக்கு நினைவூட்டுகிறது. ஒரு அத்தியாயத்தின் முடிவையும் மற்றொரு அத்தியாயத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
பண்டிகைக்காலங்களை குறிக்கும் வகையில், பலூன்கள், வண்ணக் காகிதத் துண்டுகள் உள்ளிட்டவற்றால் 2026 அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கூடி, கடந்த ஆண்டைப் பற்றி சிந்தித்து, புதிய ஆண்டை வரவேற்கின்றனர். விரைவில், 2026ன் தொடக்கத்தை அதிகாரப்பூர்வமாகக் குறிக்கும் வகையில் நள்ளிரவு மணி அடிக்கும் என்பதை டூடுல் நினைவூட்டுகிறது.
வாசகர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

