தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'இ - காமர்ஸ்' தரவுகள் சேகரிக்க அரசு முடிவு

'இ - காமர்ஸ்' தரவுகள் சேகரிக்க அரசு முடிவு

'இ - காமர்ஸ்' தரவுகள் சேகரிக்க அரசு முடிவு


ADDED : ஆக 26, 2025 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 26, 2025 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி : மத்திய அரசு அதன் பணவீக்க அளவீட்டை புதுப்பிக்க திட்டமிட்டு உள்ளது.

மாறிவரும் நுகர்வோர் பழக்கவழக்கங்களை பிரதிபலிக்கும் வகையில், 'அமேசான்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்ற மின்னணு வணிக தளங்களில் இருந்து விலை நிலவரம் குறித்த தரவுகளைப் பெற மத்திய புள்ளியியல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வீட்டு செலவினங்களில் அவற்றின் பங்கு உயரும்போது, 'ஆன்லைன்' தளங்களின் விலை நிலவரத்தை கணக்கிடுவதன் வாயிலாக இந்தியாவின் சில்லரை பணவீக்க குறியீட்டை மேலும் வலுவானதாக மாற்ற இந்நடவடிக்கை உதவும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 12 நகரங்களில் உள்ள, 'இ -  காமர்ஸ்' தளங்களில் இருந்து இந்த தரவுகளை சேகரிக்க துவங்கியுள்ளதாக அமைச்சகத் தின் செயலர் சவுரப் கார்க் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us