/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
ரூ.1.17 கோடிக்கு கார் பதிவு எண் ஏலத்தில் எடுத்தவருக்கு அரசு 'கிடுக்கி'

ADDED : டிச 04, 2025 06:17 AM

ஹரியானா: ஹரியானாவில், காருக்கான வி.ஐ.பி., எண்ணை, 1.17 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தவர் சொத்து மதிப்பு விசாரணையில் சிக்கியுள்ளார்.
ஹரியானாவில், வாகனங்களுக்கான வி.ஐ.பி., மற்றும் 'பேன்சி' எண்களை பெற, ஆன்லைன் வாயிலாக வாரந்தோறும் ஏலம் நடத்தப்படுகிறது. தங்களுக்கு விருப்பமான எண்ணை ஏலத்தில் எடுக்கும் நபர், இரண்டு தினங்களில் ஏலத்தொகையை செலுத்த வேண்டும்.
கடந்த வாரம் நடந்த ஏலத்தில், ஹரியானாவின் 'ஹெச்.ஆர்.88 பி 8888' என்ற எண் அதிக தொகைக்கு ஏலம் போனது. இந்த எண்ணை பெற, 45 பேர் பதிவு செய்திருந்தனர்.
ஏலத்தின் இறுதியில், போக்குவரத்து சேவையில் ஈடுபடும், 'ரோமுலஸ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் இயக்குநர் சுதிர் குமார், அதிகபட்சமாக, 1.17 கோடி ரூபாய்க்கு இந்த எண்ணை ஏலம் எடுத்தார்.
இதையடுத்து, இந்தியாவின் மிக விலையுயர்ந்த, 'நம்பர் பிளேட்' என்ற பெருமையை 'ஹெச்.ஆர்.88 பி 8888' பெற்றது.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் அந்த தொகையை சுதிர் குமாரால் செலுத்த முடியவில்லை. இதையடுத்து, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டது. ஏலத் தொகை செலுத்தாத சுதிர் குமாரின் சொத்து மதிப்பு குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.