sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ 5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரம்

5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரம்

5ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் அரசு தீவிரம்


ADDED : அக் 01, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2025 11:36 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நம் நாட்டின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் முயற்சியை, மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான ஒப்பந்தப் பணியை கைப்பற்ற, ஏழு நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருகின்றன.

நம் அண்டை நாடுகளால் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில், எல்லைகளை பாதுகாக்கும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்களை படைகளில் இணைக்க மத்திய அரசு முடிவு செய் நுள்ளது. இதற்காக, சுயசார்பு கொள்கையின்படி நம் நாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, டி.ஆர். டி.ஒ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு அமைப்பின் கீழ் அதிநவீன நடுத்தர மேம்பட்ட போர் விமானங்களை வடிவமைத்து வருகிறது.

இதற்கான ஒப்பந்தத்தை கைப்பற்ற, 'எல் அண்ட் டி. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், டாடா அட் வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமி டெட், அதானி டிபென்ஸ்' உட்பட ஏழு நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் அளிக்கும் திட்டமதிப்பீட்டின்படி, 'பிரம்மோஸ்' ஏவுகணை திட்டத்தலைவர் சிவதாணு பிள்ளை தலை மையிலான குழு ஆய்வு செய்து, ராணுவ அமைச்ச கத்திடம் அறிக்கை தாக்கல் செய்யும். இதில், இரண்டு நிறுவனங்களை இறு திசெய்து ஒப்பந்தத்தை வழங்க நடவடிக்கை எடுக்சுப்படும்.

இரண்டு சக்திவாய்ந்த இன்ஜின்களுடன், ஒருவர் மட்டுமே இயக்கக்கூடிய வகையில், உட்புறத்தில் 1.300 கிலோ எடையிலும், வெளிப்புறத்தில் 5,500 கிலோ எடையிலான வெடிப்பொருட்களை எடுத்து செல்லவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களில் வாதி ஏற் படுத்தப்பட்டுள்ளன.

இதுதவிர 6,500 கிலோ எடையிலான எரிப்பொ குளை கொண்டு செல்லக் கூடிய வகையில் வடிவ மைக்கப்படும்.ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை, இந் திய விமானப்படையில் 2035ம் ஆண்டுக்கு முன் இணைக்கும் நோக்கில் 125 போர் விமானங்களை தயாரிக்க, 2 லட்சம் கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இவ்வகை போர் விமானங்களை, அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. விரைவில் இப்பட்டி யலில் இந்தியாவை இணைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us