மருத்துவ கவுன்சிலை கலைக்க கவர்னருக்கு அரசு பரிந்துரை
மருத்துவ கவுன்சிலை கலைக்க கவர்னருக்கு அரசு பரிந்துரை
ADDED : மே 16, 2025 08:38 PM
புதுடில்லி:“மருத்துவக் கவுன்சிலை கலைக்க, துணைநிலை கவர்னருக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,”என, சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங் கூறினார்.
இதுகுறித்து, டில்லி சுகாதாரத் துறை அமைச்சர் பங்கஜ் குமார் சிங், கூறியதாவது:
தலைநகர் டில்லியில் மருத்துவ நடைமுறையை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்டுள டில்லி மருத்துவக் கவுன்சில் தன்னாட்சி பெற்ற சட்டரீதியான அமைப்பு. நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தனியார் மருத்துவமனை டாக்டர்களும் இந்தக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.
டில்லி மருத்துவக் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக் காலய்ம் விரைவில் முடிகிறது. மேலும், சில டாக்டர்களின் பதிவு தொடர்பாக கவுன்சில் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. மேலும், முறைகெடுகள் தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, டில்லி மருத்துவக் கவுன்சிலை கலைக்க, துணைநிலை கவர்னர் சக்சேனாவுக்கு அரசு தரப்பில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்தக் கோப்பு கவர்னரின் பரிசீலனையில் உள்ளது.
புதிய கவுன்சில் அமைக்கும் வரை, டில்லி சுகாதார சேவைகள் இயக்குனரகம், கவுன்சிலின் பணிகளைக் கவனிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.