ADDED : நவ 17, 2024 11:59 PM

லக்னோ: உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லக் ஷ்மி பாய் மருத்துவக் கல்லுாரியில், கடந்த 15ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.
இது குறித்து மூன்று கட்ட விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். ஜான்சி கமிஷனர் விபுல் துபே தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்துள்ளனர். இந்த அறிக்கை மாநில அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அதில், 'மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் உள்ள சுவிட்ச் போர்ட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு நீர் தெளிப்பான்கள் அமைக்கப்படாததால், தீயை அணைக்க முடியவில்லை.
'இந்த தீ விபத்து தற்செயலானது. இதில் குற்றவியல் சதி இல்லை. இதனால் இதுவரை எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்படவில்லை' என, குறிப்பிடப்பட்டுள்ளது.