ADDED : ஜன 29, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாசன்: ஹாசன் மாவட்டம், பேலுார் கிரிகட்டே கிராமத்தின் தேவராஜ், 52. லக்குந்தா கிராம பஞ்சாயத்து ஊழியர். 2021ம் ஆண்டு பாஸ்கர், குஷி ஆகியோரிடம் இருந்து, தேவராஜ் தலா 50,000 கடன் வாங்கி இருந்தார். இதற்கு இதுவரை வட்டியாக 2 லட்சம் ரூபாய், கட்டி உள்ளார். ஆனாலும் கூடுதல் வட்டி கேட்டு, தேவராஜிக்கு, இருவரும் தொல்லை கொடுத்தனர்.
கடந்த 7ம் தேதி வட்டி கட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையில், தேவராஜை, இருவரும் தாக்கினர். அவரை பிடித்து கீழே தள்ளினர். தலையில் படுகாயம் அடைந்தவர், ஹாசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், கோமா நிலைக்குச் சென்றார். நேற்று மதியம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த பாஸ்கர், குஷி தலைமறைவாகிவிட்டனர்.