ADDED : அக் 18, 2024 11:06 PM

பெங்களூரு: பெங்களூரு வந்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன், டில்லியில் இருந்து நேற்று பெங்களூரு வந்தார்.
ஜே.சி., நகரில் உள்ள துார்தர்ஷன் அலுவலகத்தில் அதன் செயல்பாடுகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின், ராஜ்பவன் சென்ற அவர், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
அப்போது அமைச்சர் முருகனுக்கு, மைசூரு தலைப்பாகை, சால்வை அணிவித்து கவர்னர் கவுரவித்தார். கர்நாடகா மற்றும் தேசிய அரசியல், முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின், வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பெங்களூரில் இருந்து மத்திய அமைச்சர் புறப்பட்டுச் சென்றார்.

