தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கன்னட மொழியில் பெயர் பலகை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்

கன்னட மொழியில் பெயர் பலகை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்

கன்னட மொழியில் பெயர் பலகை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்


ADDED : பிப் 27, 2024 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு கர்நாடகாவில் உள்ள அனைத்து விதமான வர்த்தக கடைகளின் பெயர் பலகைகளிலும், 60 சதவீதம் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம் என்ற சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் கன்னட மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு கன்னட சங்கங்கள் அரசை வலியுறுத்தி வந்தன. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும், மொழி, எல்லை, நீர் விஷயத்தில் உறுதியாக இருப்போம் என்று கூறி வருகின்றன.

முதல்கட்டமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து விதமான வர்த்தக கடைகளின் பெயர் பலகைகளிலும், 60 சதவீதம் கன்னட மொழியில் இருக்க வேண்டும் என்றும், மீதி 40 சதவீத்தில் வேறு மொழி இருக்கலாம் என்று அரசு உத்தரவிட்டது.

இதன்படி பெயர் பலகைகள் வைப்பதற்கு, பிப்ரவரி 28ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டது. இந்த கெடு, நாளையுடன் நிறைவுபெறுகிறது. இதற்கிடையில், பெயர் பலகைகளில் தவீதம் 60 கன்னட மொழியில் இருப்பது கட்டாயம் என்ற புதிய சட்ட திருத்த மசோதா, சட்டசபை, சட்டமேலவையில் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.

எனவே வர்த்தக கடைகள், தொழிற்சாலைகள், அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள், கேளிக்கை விடுதிகள், ஹோட்டல்கள் உட்பட அனைத்து விதமான வர்த்தக கடைகளின் பெயர் பலகைகள், 60 சதவீதம் கன்னட மொழியில் இருப்பது கட்டாயம். அதுவும், மேல் பகுதியில் இருக்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us