தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/எய்ம்ஸ் மாணவியருடன் கவர்னர் கலந்துரையாடல்

எய்ம்ஸ் மாணவியருடன் கவர்னர் கலந்துரையாடல்

எய்ம்ஸ் மாணவியருடன் கவர்னர் கலந்துரையாடல்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மாணவ – மாணவியருடன் துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சாந்து நேற்று உரையாடினார். அப்போது, பாதுகாப்பு தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார்.

டில்லி துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சாந்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிக்கு நேற்று வந்தார். அங்குள்ள உணவகத்தில், மாணவ – மாணவியர் மற்றும் பயிற்சி டாக்டர்களுடன் உரையாடினார். அப்போது, ‘பாதுகாப்பு தொடர்பாக மாணவியர் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்க டில்லி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்’ என உறுதியளித்தார்.

மருத்துவக் கல்வியின் சவால்கள் குறித்து, மாணவ – மாணவியரின் அனுபவங்கள், நம் நாட்டின் மருத்துவத் துறையின் அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் மாணவியரின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை கேட்டறிந்தார்.

‘மாணவர்களின் வெளிப்படையான கருத்துகள் முக்கியமானவை’ என்று கூறிய கவர்னர் சாந்து, ‘நம் நாட்டை ஆரோக்கியமாக நாடாக மாற்றவும், தலைநகர் டில்லியை சுகாதார தலைநகராகவும் கட்டமைக்கவும், அறிவுப்பூர்வமாக சேவை செய்யவும், சக மனிதர்கள் மீது அக்கறையுடனும் பரிவுடனும், வருங்கால டாக்டர்களாகிய நீங்கள் செயல்பட வேண்டும்’ என்று, டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us