தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ராணுவ அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்க கவர்னர் சாந்து உத்தரவு

 ராணுவ அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்க கவர்னர் சாந்து உத்தரவு

 ராணுவ அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்க கவர்னர் சாந்து உத்தரவு


ADDED : ஏப் 14, 2026 04:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 04:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி;டில்லியில், தன் வீட்டுக்கு அருகே காரில் அமர்ந்தவாறு மது பானம் அருந்தியதை தட்டிக் கேட்ட ராணுவ பிரிகேடியர் பி.எஸ்.அரோரா குடும்பத்திற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க, கவர்னர் சாந்து உத்தரவிட்டார்.

தென் மேற்கு டில்லியில் உள்ள தன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில், நீண்ட நேரம் அமர்ந்து, இருவர் மதுபானம் அருந்தினர். அதை, பிரிகேடியர் பி.எஸ்.அரோரா மற்றும் அவரது ஐ.ஐ.டி.,யில் பட்டம் படித்த அவரது மகன் கண்டித்தனர்.

அந்த நேரம், அங்கிருந்து நகர்ந்த அந்த இருவர், ஒரு கும்பலை அழைத்து வந்து, ராணுவ அதிகாரி பி.எஸ்.அரோரா மற்றும் மகனிடம் தகராறு செய்தனர். இருவரும் தாக்கப்பட்டனர். அதை தட்டிக் கேட்ட, அந்த ராணுவ அதிகாரியின் மனைவியும், கும்பலால் மிரட்டப்பட்டார்.

இந்த விவகாரம் நேற்று முன்தினம் நடந்தது. உடனடியாக, போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து பேசிய, துணை நிலை ஆளுநர் சாந்து, நியாயமான முறையில் விசாரிக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் , டில்லி போலீஸ் கமிஷனர் மற்றும் டி.ஜி.பி.,க்கு கவர்னர் பிறப்பித்த உத்தரவில், 'காரில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்ட ராணுவ பிரிகேடியர் மற்றும் அவரது குடும்பத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இதற்கான கடிதத்தில், 'இந்த நாட்டின் சட்டத்தை துாக்கிப் பிடிக்க, ஒவ்வொரு குடிமக்களுக்கும் உரிமை உள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us