கவர்னரால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை: டில்லியில் அப்பாவு புகார்
கவர்னரால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை: டில்லியில் அப்பாவு புகார்
UPDATED : செப் 23, 2024 10:31 PM
ADDED : செப் 23, 2024 04:24 PM

புதுடில்லி: '' சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் நிறுத்திவைப்பதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போகிறது,'' என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
டில்லியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் காமன்வெல்த் பார்லிமென்ட் கூட்டமைப்பின் இந்திய பிராந்திய கூட்டத்தில் தமிழக சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை காரணம் கூறாமல் கவர்னர் நிறுத்தி வைக்கிறார். லோக்சபா, ராஜ்யசபாவில் நிறைவேறும் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஓரிரு மணி நேரத்தில் ஒப்புதல் வழங்குகிறார்.
சட்டசபையில் நிறைவேறும் மசோதாக்கள் பல ஆண்டுகள் கவர்னர் அலுவலகத்தில் முடங்கி கிடப்பதால், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை செயல்படுத்த முடியவில்லை. சட்டசபையை அவமதிப்பது எம்.எல்.ஏ.,க்களை அவமதிப்பது போல் ஆகும். சமீபகால நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு பெரும் சவால்களை ஏற்படுத்தி உள்ளன. இவ்வாறு அப்பாவு பேசினார்.