டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து கொடுத்தால் அரசு நடவடிக்கை
டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து கொடுத்தால் அரசு நடவடிக்கை
ADDED : செப் 21, 2024 11:20 PM

பெங்களூரு: 'டாக்டர்களின் சீட்டு இல்லாமல், மருந்து, மாத்திரை கொடுக்கும் மருந்து கடைகளின் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் அவரது நேற்றைய பதிவு:
மாநிலத்தில் போதைப்பொருட்களை, வேருடன் வெட்டி சாய்க்க, எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. கொப்பால் மாவட்டம், கங்காவதியில் மருந்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மருந்துக் கடைகளில், டாக்டர்களின் சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை கொடுக்கின்றனர். சிந்தடிக் டிரக்ஸ் கிடைப்பதாக, தகவல் வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துகின்றனர். விதிகளை மீறும் மருந்து கடைகளின் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
சமுதாயத்துக்கு போதைப்பொருட்கள் கேடு விளைவிக்கின்றன. இவற்றை ஒழித்து கட்ட எங்கள் அரசு, கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் முயற்சியில் பொது மக்களும் கைகோர்க்க வேண்டும். எங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அனைவரும் சேர்த்து போதைப்பொருள் இல்லாத கர்நாடகாவை உருவாக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.