உரங்களில் 45 சதவீத அமோனியம் நைட்ரேட் கலந்தால் வெடிபொருள்
உரங்களில் 45 சதவீத அமோனியம் நைட்ரேட் கலந்தால் வெடிபொருள்
UPDATED : ஜூலை 28, 2011 07:31 AM
ADDED : ஜூலை 28, 2011 07:26 AM
புதுடில்லி: விசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரத்தில் 45 சதவீத அளவுக்கு மேல் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை பயன்படுத்தினால் அது அபாயகரமான வெடிபொருளாக கருதப்படும் என மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி மும்பையில் மூன்று இடங்களில்நடந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த வெடிகுண்டு சம்பவத்தில் பெருமளவு அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டு அரசு செய்தி குறிப்பில், இனி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமான அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை பயன்படுத்தினால் அத்தகைய உரங்கள் அபாயகரமான வெடிப்பொருள் என கருதப்படும். இது மத்திய அரசின் வெடிபொருட்கள் பயன்பாட்டு சட்டம் 1908-ன்படி மிகுந்த அபாயகரமான வெடிபொருள் என அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது அரசிதழிலும் வெளியிடப்பட்டது.