ADDED : ஆக 17, 2025 10:04 PM
புதுடில்லி:வேலை செய்த, 'இ - காமர்ஸ்' நிறுவனத்தில் விலை உயர்ந்த மொபைல் போன்களை திருடிய ஊழியர் கைது செய்யப்பட்டு, இரண்டு 'ஐ - போன்'கள், ஒரு விலை உயர்ந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்மேற்கு டில்லி சாகர்பூரில் உள்ள இ - காமர்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தவர் பிலால் என்ற மணீஷ் குமார். இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த மொபைல் போன்கள் மாயமாகின.
இதுகுறித்து, நிறுவனம் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நிறுவன ஊழியரான உத்தம் நகர் மோகன் கார்டனைச் சேர்ந்த பிலால் என்ற மணீஷ் குமாரை கைது செய்து, இரண்டு ஐ - போன்கள் மற்றும் ஒரு விலையுயர்ந்த ஆண்ட்ராய்டு மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கண்காணிப்புக் கேமராக்களின் மின்சார இணைப்புகளைத் துண்டித்து விட்டு, மொபைல் போன்களை திருடியதை மணீஷ் குமார் ஒப்புக் கொண்டார்.
எம்.பி.ஏ., பட்டதாரியான மணீஷ் குமார், 10 மாதங்களுக்கு முன் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். விசாரணை நடக்கிறது.