ADDED : மார் 15, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைசூரு: ஆற்றில் மூழ்கிய இரண்டு பேரன்களை காப்பாற்றச் சென்ற தாத்தாவும், நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மைசூரு, டி.நரசிபுராவின் திருமலகூடு கிராமத்தில் வசித்தவர் சவுடய்யா, 70. இவர் நேற்று மாலை தன் பேரன்கள் பரத், 13, தனுஷ், 10, ஆகியோருடன், கிராமத்தின் அருகில் உள்ள காவிரி ஆற்றங்கரைக்கு வந்தார்.
நீச்சல் தெரியாத பரத்தும், தனுஷும் ஆற்றில் இறங்கி விளையாடியபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்க துவங்கினர். அதிர்ச்சி அடைந்த சவுடய்யா, பேரன்களை காப்பாற்ற ஆற்றில் இறங்கினார்.
அவருக்கும் நீச்சல் தெரியாததால், அவரும், பேரன்களுடன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், மூவரின் உடல்களை வெளியே எடுத்தனர்.
டி.நரசிபுரா போலீஸ் நிலையத்தில் புகார் பதிவாகி உள்ளது.