ADDED : ஏப் 24, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்:கேரளாவில் 80 வயது பாட்டி விறகு வெட்டும் போது பக்கத்தில் சென்ற பேரன் தலையில் அரிவாள் வெட்டு விழுந்து இறந்தான்.
கேரள மாநிலம் கண்ணுார் அருகே ஆலக்கோடு பகுதியைச்சேர்ந்தவர் விஷ்ணு கிருஷ்ணன். மனைவி பிரியா. இவர்களது ஒன்றரை வயது மகன் தயாள். பிரியாவின் தாய் நாராயணி 80, வீட்டின் முன்னால் அரிவாளால் விறகு வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தயாள் , திடீரென பாட்டியின் அருகே சென்றான். நாராயணிக்கு ஒரு கண் பார்வை இல்லாததால் பேரன் வந்ததை கவனிக்காமல் விறகை வெட்டினார். இதில் தயாளின் தலையில் வெட்டு விழுந்தது.
பலத்த காயம் அடைந்த தயாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தான். ஆலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

