பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பம்; ஐ.ஐ.டி.,யில் 4 நாட்கள் பயிலரங்கம்
பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பம்; ஐ.ஐ.டி.,யில் 4 நாட்கள் பயிலரங்கம்
ADDED : ஜூன் 02, 2025 11:55 PM
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி., மற்றும் 'டெக்னாலஜி ஐஹப் பவுண்டேஷன்' ஒருங்கிணைந்து நடத்தும், தேசிய அளவிலான பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிலரங்கு நாளை துவங்குகிறது.
பாலக்காடு, கஞ்சிக்கோடு அருகே உள்ள ஹோட்டலில் நடக்கும் நான்கு நாள் பயிலரங்கம், 6ம் தேதி நிறைவு பெறுகிறது.
பசுமை ஹைட்ரஜன் ஆற்றல் அமைப்புகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்து, இந்த பயிலரங்கில் விவாதிக்கப்படுகிறது.
ஹைட்ரஜன் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாடு போன்ற முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்த உள்ளது. இந்தியாவிலிருந்து வரும் நிபுணத்துவ ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை தலைவர்கள் இந்த பயிலரங்கில் பங்கேற்கின்றனர்.
இந்த பயிலரங்கில், கல்வி, தொழில்துறை மற்றும் அரசாங்க ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான விளக்கக்காட்சிகள், தொழில்நுட்ப அமர்வுகள், குழு விவாதங்கள் மற்றும் நெட்ஒர்க்கிங் வாய்ப்புகள் இடம்பெறும். தேசிய அளவிலான பங்குதாரர்களுடன் ஈடுபடவும், ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களில் சரியான பயன்பாடுகள் மற்றும் புதுமைகளை ஆராயவும், இந்தப் பயிலரங்கம் வாய்ப்பளிக்கும்.
பயிலரங்கின் ஒரு பகுதியாக, வரும் 7ம் தேதி கொச்சியில் உள்ள, பி.பி.சி.எல்., பசுமை ஹைட்ரஜன் ஆலையில் நேரடி விளக்கம் அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களை, https://iptif.tech/workshops-and-bootcamps என்ற இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு, பாலக்காடு ஐ.ஐ.டி., நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

