ADDED : அக் 18, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: தங்கவயல், 'பெஸ்காம்' அலுவலகத்தில் நுகர்வோர் குறைகேட்பு நிகழ்ச்சி நாளை 19ம் தேதி நடக்கிறது.
தங்கவயலில் மின் இணைப்பு, திடீர் மின் வெட்டு, மின் கட்டணம், டிபாசிட் தொகை குளறுபடி, புதிய மின் இணைப்பு பெறுதல், இரும்பு கம்பங்களை அகற்றி கான்கிரீட் கம்பங்கள் நிறுவும் திட்டம் அமலில் இருந்தும், இன்னும் பல இடங்களில் இரும்பு மின் கம்பங்களே இருந்து வருகின்றன.
இதனால், ஆபத்து உள்ளதால் அவற்றை அகற்ற வேண்டும். நடைபாதைகளில் 3 அடி உயரத்தில் டிரான்ஸ்பார்மர்கள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
இந்நிலையில், நாளை 19ம் தேதி மாலை 3:00 மணிக்கு, சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள பெஸ்காம் அலுவலகத்தில் நுகர்வோர் குறைகேட்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.