sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

50 ரூபாய் சமாச்சாரம்! வேனை மின்னல் வேகத்தில் விரட்டிச் சென்று பிடித்த மணமகன்

/

50 ரூபாய் சமாச்சாரம்! வேனை மின்னல் வேகத்தில் விரட்டிச் சென்று பிடித்த மணமகன்

50 ரூபாய் சமாச்சாரம்! வேனை மின்னல் வேகத்தில் விரட்டிச் சென்று பிடித்த மணமகன்

50 ரூபாய் சமாச்சாரம்! வேனை மின்னல் வேகத்தில் விரட்டிச் சென்று பிடித்த மணமகன்

3


ADDED : நவ 26, 2024 11:41 AM

Google News

ADDED : நவ 26, 2024 11:41 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீரட்: உ.பி.யில், 50 ரூபாய் மொய் பணத்தை திருடி வேனில் தப்பித்த நபரை, விரட்டிச் சென்று மணமகன் அடித்து உதைத்து பணத்தை வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வட மாநிலங்களில் திருமண நிகழ்வு என்பது எப்போதும் கொண்டாட்டமாக இருக்கும். மணமகனை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்து ஆட்டம், பாட்டம் என கலகலப்புக்கு குறைவில்லாமல் இருக்கும். இந் நிலையில், உ.பி.யில், திருமண நிகழ்வின் போது மொய் பணத்தை திருடி தப்பிய நபரை குதிரையில் சென்று மணமகன் விரட்டிப்பிடித்த சுவாரசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

மீரட் நகர் அருகில் உள்ள துங்கராவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ் குமார். அவருக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்தார்.

அதற்காக வண்ணமயமான மாப்பிள்ளை தோரணையுடன் அலங்கரித்து அவர் குதிரையில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். அவருக்கு வாழ்த்துகள் கூறி பலரும், ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாக அளித்தனர். அவர்களில் ஒருவர் 50 ரூபாய்களை ஒன்றாக இணைத்து மாலைபோல மாற்றி மாப்பிள்ளையின் கழுத்தில் அணிவித்தார்.

அந்த பணமாலையுடன் அவர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு குதிரையில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தார். கழுத்தில் பணமாலையுடன் தேவ்குமார் வந்ததை கண்ட அங்குள்ள ஒருவர், அதில் இருந்து ஒரு 50 ரூபாயை அபேஸ் செய்துவிட்டு வேன் ஒன்றில் பறந்தார்.

திருமண பரபரப்புக்கு நடுவே இதை கவனித்த மணமகன் தேவ்குமார் அதை எளிதாக விட விரும்பவில்லை. வேனில் மர்ம நபர் தப்பிச் செல்ல, தாம் வந்த குதிரையில் இருந்து குதித்தார். துளியும் தாமதிக்காமல் வேனில் தொற்றிக் கொண்டார். இதைக் கண்ட மர்ம நபர் வேனை வேகமாக ஓட்டினார். ஜன்னல் கதவு வழியாக உள்ளே நுழைந்த தேவ்குமார், மர்ம நபரை அடித்து துவைத்தார்.

பின்னர், அந்த ஒத்தை 50 ரூபாய் நோட்டை எடுத்த தேவ்குமார், வேனில் இருந்து இறங்க முற்பட்டார். அதே நேரத்தில், மணமகன் வேனில் தொங்கியபடி செல்வதைக் கண்ட அவரது உறவினர்கள் வேறுசில இரு சக்கர வாகனங்களில் வேனை பின்தொடர்ந்தனர். நடுரோட்டில் வேன் முன்னும், பக்கவாட்டிலும் பைக்குகளை நிறுத்தி மறிக்க, தனது 50 ரூபாய் பணத்தை மீட்டுவிட்ட திருப்தியில் வெளியில் குதித்தார்.

அடுத்த நொடியே ஆவேசமாகி வேனை ஓட்டி வந்த நபரை உள்ளேயிருந்து வெளியே இழுத்து கும்மியெடுத்தார். அவருடன் உறவினர்களும் சேர்ந்த கொள்ள, ஊரே பார்க்க, பார்க்க அனைவரும் அடி பின்னி எடுத்தனர். இந்த சம்பவத்தை அவ்வழியாக சென்ற சிலர் தமது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us