செப்., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி: 9% அதிகம்
செப்., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி: 9% அதிகம்
UPDATED : அக் 01, 2025 03:33 PM
ADDED : அக் 01, 2025 03:25 PM

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி செப்டம்பர் மாதம் ரூ.1.89 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு (2024) செப்., மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதனிடையே ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் கடந்த (செப்டம்பர்) மாதம் 22ம் தேதி முதல் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.1.89 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகம் ஆகும்.
தொடர்ச்சியாக கடந்த 9 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் ரூ.10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.
முந்தைய மாதங்களில் ஜிஎஸ்டி வசூல்
* ஆகஸ்ட் மாதம் -ரூ.1.86 லட்சம் கோடி
* ஜூலை மாதம் - 1.96 லட்சம் கோடி
* ஜூன் மாதம் - ரூ.1.84 லட்சம் கோடி
* மே மாதம் - ரூ.2.01 லட்சம் கோடி
* ஏப்ரல் மாதம் - ரூ.2.36 லட்சம் கோடி
* மார்ச் மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி
* பிப்., மாதம் - ரூ.1.84 லட்சம் கோடி
* ஜன., மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.